கேபிள் டி.வி.யில் ‘தர்பார்’ படம்

ரஜினி நடித்த ‘தர்பார்‘‘ படம் 9 ந் தேதி தான் வெளியானது. இதற்கிடையில் அப்படம் 12 ந் தேதியே கேபிள் டி வி யில் ஒளிபரப்பாகி உள்ளது. இது பற்றி படத்தை தயாரித்துள்ள லைக்கா நிறுவனம் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-
தர்பார் படத்தை மதுரை அருகில் இயங்கும் சரண்யா கேபிள் டி நெட் வொர்க் நிறுவனம் சட்ட விரோதமாக 12 ந் தேதி ஒளிபரப்பி இருக்கிறது. இந்த செயல் லைக்கா நிறுவனத்துக்கும், மதுரை வினியோகஸ்தருக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும் சீரழிப்பதாக உள்ளது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘
இவ்வாறு புகாரில் கூறியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *