BREAKING NEWS

விமர்சனம் : டகால்டி

படத்தின் கதாநாயகன் சந்தானம் ஒரு ‘டகால்டி‘ பேர்வழி. ரூ. 10 கோடி பணத்துக்காக திருசெந்தூர் பெண்னை கடத்தி வந்து வில்லனிடம் ஒப்படைக்கிறார். பிறகு அவரது மனசு உறுத்துகிறது. அவரே போய் வில்லனிடம் இருந்து அப்பெண்ணை காப்பாற்றி கைப்பிடிக்கும் கதை இது.
சந்தானத்துக்கே உரிய நகைசுவை கதை. ஆக்ஷன் கலந்து கொடுத்து இருக்கிறார். சந்தானம் கதாநாயகன் ஆகி விட்ட போதிலும் இன்னும் அந்ந்த கதாநாயக களை முகத்தில் வரவில்லை. பழைய சந்தானத்தையே பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால் ஆக்ஷன் காட்சியில் நல்ல முன்னேற்றம். அடித்து வெளுக்கிறார்.
திருசெந்தூர் பெண்ணாக ரித்திகா சென்.டைர்க்டர் ஆக வேண்டும் ஆசையில் சந்தானத்தை நம்பி அவருடன் ஓடி வரும் கிராமத்து பெண் வேடம். வெகுளி தன நடிப்பு ஜோராக இருக்கிறது.அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் இருவேடத்தில் வெளுத்து வாங்க்கி இருக்கிறார்.பணக்கார வில்லனாக தருண் அரோரா. போனில் உறுமுவதோடு சரி. அவரது மும்பை தாதாவாக ராதாரவி.கறுப்பு உடையில் வந்து மிரட்டுகிறார்.சந்தானத்துடன் கூடவே வருபவராக யோகிபாபு. இருவரும் ஒருவரை ஒருவர் ‘கலாய்த்து‘ கொள்வது ரசிகர்களுக்கு கிடைத்த டபுள் போனஸ்.
அதைவிட அமர்களப்படுத்துவது ‘ சைனா மதன்‘ ஆக வரும் பிரமானந்தம் தான்.கதாநாயகியை போல் இன்னொரு டம்மி கதாநாயகியை செட்டப் செய்து வில்லனிடம் பணம் பறிக்க முயலும் கிளைமாக்ஸ் காட்சி – சிரிப்பு மயம்.
இயக்கி இருப்பவர் விஜய் ஆனந்த். ‘டகால்டி‘ கேரக்டர் பம்முகிறவனா? பாய்கிறவனா? என்பது சரியாக சொல்லப்படவில்லை. அதே மாதிரி எல்லாம் முடிந்து போன கடைசி நேரத்தில் ஹீரோ மனம் மாறுவதும் – ஒருவர் மாதிரி இன்னொருவர் ஆள் மாறாட்டம் செய்வதும் பழைய ‘டைப்‘.

புதுசா யோசித்து இருந்தால் ‘டகால்டி‘ இன்னும் ‘டக்கராக‘ இருந்து இருக்கும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *