BREAKING NEWS

குற்றப்பின்னணி வேட்பாளர்களுக்கு கிடிக்கிப்பிடி…. அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட உத்தரவு

குற்றப்ப்பின்னணி உள்ள வேட்பாளர்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் 72 மணி நேரத்தில் தகவல் தெரிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுளள்து.

கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில், ‘குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது அதுகுறித்த விவரங்களை செய்தித்தாள்களில் கட்சிகள் விளம்பரப்படுத்த வேண்டும். இதனை தலைமை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால் 2014ல் வந்த தீர்ப்புக்கு பின் எந்த ஒரு அரசியல் கட்சியும் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் குறித்த குற்ற விவரங்களை பொது தளங்களில் வெளியிடவில்லை. தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் குற்றப்பின்னணி வேட்பாளர்கள் குறித்த விளம்பரம் தொடர்பாக நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையிலான முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் என்று பாஜக-வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியாயா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், அரசியலில் இருந்து கிரிமினல்களை அகற்றுவது குறித்த வலிமையான சட்டத்தை உருவாக்க வேண்டும்; குற்றப்பின்னணி வேட்பாளர்கள் பற்றி ஊடகங்களில் தகவல் வெளியிடுமாறும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், அவ்வாறு செய்யவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் பிறப்பித்த உத்தரவில், குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது. ஆனால் சில நெறிமுறைகளை நீதிமன்றம் வழங்க கடமைப்பட்டுள்ளது. கடந்த 4 பொதுத்தேர்தலில் அரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவது அபாயகரமானது. குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள், அவர்களின் விவரத்தை 48 மணிநேரத்தில் கட்சி இணையதளம் மற்றும் சமூக வலைதளம் மற்றும் முக்கிய நாளேடுகளில் வெளியிட வேண்டும். இந்த விவரங்களை, 72 மணி நேரத்திற்குளும் அரசியல் கட்சிகளும், தங்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை வேட்பாளர்களும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.

குற்றப்பின்னணி கொண்டவர்களை வேட்பாளராக தேர்வு செய்தது குறித்தும், வெற்றி வாய்ப்பை தாண்டி அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியது குறித்தும் அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும். அவ்வாறு அரசியல் கட்சிகள் விவரங்களை அளிக்க தவறினால் தேர்தல் ஆணையம், கோர்ட்டில் முறைப்படி தெரிவிக்க வேண்டும். கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம். உத்தரவை 2018ல் அளித்த தீர்ப்பை அரசியல் கட்சிகள் செயல்படுத்தவில்லை.இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *