BREAKING NEWS

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகன் ஆகிறார்

கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தீவிர ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், இப்போது சினிமாவில் நடித்து வருகிறார். சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் அவர் ஒரு வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை அடுத்து ‘‘கன்சல்டன்ஸி சர்வீசஸ்‘‘ என்ற வெப் சீரிஸில் திருவள்ளுவர் கேரக்டரில் நடிக்கிறார் ஹர்பஜன் சிங்.
இப்போது ஒரு படத்தில் ஹர்பஜன் சிங் கதா நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படத்துக்கு. ‘பிரண்ட்ஷிப்’ என்று ‘டைட்டில்’ வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர். இதுகுறித்து டுவீட் செய்திருக்கும் ஹர்பஜன் சிங்,‘‘ நேற்று கீச்சு, சினிமா கதாபாத்திரம், இணைய தொடர். இன்று பிரண்ட்ஷிப் படத்தின் நாயகன். தமிழ் மக்களுக்கு நன்றி.” என்று கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *