12 நாட்களில் படமாக்கப்பட்ட படம்

ஒரு படம் எடுக்க வருடக்கணக்கில் ஆகும் இந்த நேரத்தில் 12 நாட்களிலேயே ஒரு படத்தை தயாரித்துள்ளது பட அதிபர் சாகுல் அமீதுவின் எஸ்.எச்.மீடியா ட்ரீம்ஸ் என்ற படநிறுவனம்.
‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’. என்ற பெயரில் தயாரித்துள்ள காமெடி படம் இது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நவீன் மணிகண்டன் இயக்கிஇருக்கிறார். , ஒளிப்பதிவும் அவரே.
இப்படத்தில் விகாஷ் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக மதுமிதா நடித்திருக்கிறார். இவர்களுடன் டெல்லி கணேஷ், சித்ரா, ராகுல் தாத்தா, விஜய் டிவி ராமர், நாஞ்சில் விஜயன், அம்பானி சங்கர், நெல்லை சிவா, வெங்கடேஷ், பிரவீன் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். . அதிலும், நடிகை நல்லெண்ணெய் சித்ரா சுமார் 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதிலும் இதுவரை நடித்திராத வேடத்தில் அவர் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார்.
இவ்வளவு பெரிய நடிகர்கள் பட்டாளம் இருந்தாலும், இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் 12 நாட்களில் இயக்குநர் நவீன் மணிகண்டன் முடித்திருப்பது தான் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருக்கிறது. அதிலும், மூன்று பாடல்கள், இரண்டு சண்டைக்காட்சிகளையும் இந்த நாட்களிலேயே படமாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *