சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு போராட்டம்; 150 பேர் கைது

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்திற்குள் செல்லவதை தடுக்க, தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. வேலியை கடந்து போராட்டக்காரர்கள் ரெயில் நிலையம் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பினர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்தினர். அப்போது தடுப்பை மீறி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றதாக 150 பேரை போலீசார் கைது செய்தனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *