விமர்சனம் – சாம்பியன்

விளையாட்டு போட்டியை கருவாக வைத்து படம் இயக்குவதில் பெயர் பெற்ற இயக்குனர் சுசீந்திரன் இயக்கி இருக்கும் மற்றொரு விளையாட்டு படம் இது. இந்த முறை கால்பந்து போட்டியை கையில் எடுத்து இருக்கிறார்.
கதாநாயகன் விஸ்வாவின் தந்தையான மனோஜ் மிகசிறந்த கால்பந்து வீரர். ஒரு போட்டியின் போது மைதானத்திலேயே இறந்து விடுகிறார். இதனால் அஞ்சும் விஸ்வாவின் தாய் தனது மகனுக்கும் அந்த நிலை வந்து விடக்கூடாது பயந்து ‘‘ நீ கால்பந்து விளையாட கூடாது,‘‘ என தடை விதிக்கிறார்.

ஆனால் விஸ்வாவுக்கோ கால்பந்தாட்டம் என்றால் உயிர். தடையை மீறி விளையாடும் அவனுக்கு அப்போது தான் தெரியவருகிறது. ‘‘தனது தந்தை விளையாட்டில் சாக வில்லை. அது திட்டமிட்ட படுகொலை‘ என்று. தந்தையை கொன்றவனை அவன் பழிவாங்கினானா என்பது கதை
அரும்பு மீசை முளைக்கும் பருவத்து பையனாக ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார், விஸ்வா. தாய்க்கு ஏற்ற பிள்ளையாக, அதே சமயத்தில் தாய்க்கு தெரியாமல் கால்பந்து விளையாடும் வீரனாக அருமையாக நடித்து இருக்கிறார். தந்தையை கொலை செய்தவனை பழி வாங்குவதா? இல்லை கால்பந்தை தொடருவதா என புரியாமல் தடுமாறும் இடத்தில் நடிப்பு கச்சிதம்.
நாயகியாக நடித்திருக்கும் மிருனாளினி கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
படத்தில் கிட்ட தட்ட இன்னொரு கதாநாயகன் மாதிரி நடிகர் நரேன் கேரக்டர். கால்பந்து ‘கோட்ச்‘சாக வரும் இவர் தனது மாணவன் தவறான பாதைக்கு செல்வதை தடுத்து புத்தி புகட்டும் ஒவ்வொரு காட்சியும் அபாரம்.
தந்தை வேடத்துக்கு தாவி இருக்கிறார், பாரதிராஜாவின் மகனான மனோஜ். அடியாள் வேடத்தில் நடிப்பு நல்ல காரம்..
அரோல் கரோலி இசையில் பாடல்கள் கேட்டு ரசிக்கலாம்.. சுஜித் சாராங்கின் ஒளிப்பதிவு சிறப்பு.
படத்தின் முதல் பாதி கால் பந்து விளையாட்டையும், இரண்டாவது பாதி கொலை – பழி வாங்குதல் என தாவி வேறு திசையில் பயணப்படுவது பொறுமையை சோதிக்கிறது. ஆனாலும் விளையாடும் பருவத்தில் விளையாட்டை மட்டுமே கவனிக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லியதற்காக டைரக்டரை பாராட்டலாம்..
சாம்பியன் – பார்க்க தகுந்தவனே..
6 thoughts on “விமர்சனம் – சாம்பியன்

 1. online casina

  Write more, thats all I have to say. Literally, it seems
  as though you relied on the video to make your point.
  You obviously know what youre talking about, why waste your intelligence on just posting videos to your weblog when you could be giving us something enlightening to read?

  Reply
 2. viagra

  Spot on with this write-up, I seriously think this
  amazing site needs a great deal more attention. I’ll probably be back
  again to read through more, thanks for the advice!

  Reply
 3. Inlocuire Parbriz

  Nice post. I used to be checking continuously this blog and I’m inspired!
  Extremely helpful info specifically the ultimate section 🙂 I take care of such information a lot.
  I was looking for this particular information for a long time.
  Thank you and good luck.

  Reply
 4. kiet giang

  Amazing! This blog looks exactly like my old one! It’s
  on a entirely different subject but it has pretty much the same layout and design. Wonderful choice of colors!

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *