BREAKING NEWS

நித்தியானந்தாவின் ஜாமினை ரத்து செய்யக் கோரி வழக்கு

சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் ஜாமினை ரத்து செய்யக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆசிரமத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சாமியார் நித்தியானந்தா மீது கர்நாடக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் நித்தியானந்தா தவிர்த்து வந்தார். சமீப காலமாக அவர் தலைமறைவாக இருந்து வருகிறார்.

நித்தியானந்தாவிற்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் புதிதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காலாவதியான பாஸ்போர்ட்டை வைத்து அவர் வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாகவும், அவர் தற்போது இந்தியாவில் தான் உள்ளாரா இல்லை என்பது பற்றி தெரியவில்லை எனவும், விசாரணைக்கு ஆஜராவதில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள விலக்கு தவறான முன்னுதாரணமாகி விடும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை இன்று விசாரித்த கர்நாடக ஐகோர்ட், இந்த மனு மீது கர்நாடக அரசும் நித்தியானந்தா தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வழக்கின் விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *