BREAKING NEWS

5, 8-ம் வகுப்பு பொதுத்–தேர்வு ரத்து

புதிய கல்விக்கொள்கை
நாட்டின் கல்வி முறையில் சீர்த்திருத்தம் செய்வதற்காக முன்னாள் இஸ்ேரா தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு கடந்த 2017ம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இதையடுத்து, இந்த குழுவினர் தங்களது புதிய கல்வி வரைவுக்கொள்கையை பரிந்துரையை கடந்தாண்டு மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதில், மும்மொழிக் கொள்கை, யூ.ஜி.சி. கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய குழு, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.
5,8 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு
கஸ்தூரி ரங்கன் குழுவின் இந்த புதிய வரைவுக் கொள்ைக்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினரும், கல்வியாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்திலும் பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்காக 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டு முதல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதுதொடர்பான அரசாணையை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு வெளியிட்டது.
கடும் எதிர்ப்பு
இதையடுத்து, மாணவர்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது. மேலும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுறிரைகளும் வழங்கப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வள மைய அலுவலர்கள் கொண்டு குழு அமைத்து தேர்வு மையங்கள் அமைக்கப்படவேண்டும். மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு 60 மதிப்பெண்களுக்கு, 2 மணி என்ற நேரம் என்ற அளவிலும் நடைபெறும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் பொதுத்தேர்வு முறையை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினர். மேலும், இதை கண்டித்து பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டது.
ரத்து
இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
5 மற்றும் 8வது வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020ம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக 13.9.2019 அன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன. அவற்றை அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. எனவே, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் இதன் மூலம் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *