பாக்யராஜ் மீது வழக்கு பதிவு செய்தது சூழ்ச்சி

சினிமா ப்ளாட்பார்ம் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் வி.டி.ரித்திஷ்குமார் தயாரித்துள்ள படம் ’‘ நான் அவளைச் சந்தித்த போது’’
இப்படத்தில் கதாநாயகனாக சந்தோஷ் பிரதாப்பும் கதாநாயகியாக சாந்தினியும் நடித்துள்ள்னர். மலையால நடிகர் இன்னோசண்ட், ஜி.எம்.குமார்,பருத்தி வீரன் சுஜாதா, சாம்ஸ்,கோவிந்தமூர்த்தி,டி.பி.கஜேந்திரன்,சாந்தி வில்லியம்ஸ் ஆகியோரும் நடிக்க கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார், எல்.ஜி.ரவிசந்திரன். இவர் பரத் நடித்த சித்த வைத்த சிகாமணி, மாசாணி ஆகிய் படங்களை இயக்கியவர்.
ஆர்.எஸ்.செல்வா ஒளிப்பதிவு செய்ய ஹித்தேஷ் முருகவேல் இசை அமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது..
இசை தட்டை டைரக்டர் கே.பாக்ய ராஜ் வெளியிட இயக்குனர் பேரரசு பெற்றுக் கொண்டார். அப்போது பேரரசு பேசியதாவது:-
அப்போ வெளிவந்த படங்கள் பெண்களை நல்லவிதமாக பார்க்க வைத்தது. பாக்யராஜ் சாரின் படங்கள் எல்லாம் பார்க்கும் போது நம் மனது கெட்டுப்போக வில்லை. ஆனால் இன்று இளைஞர்கள் கெட்டுப்போவதற்கு சினிமாவே காரணமாக இருக்கிறது. கல்யாணத்திற்கு முன்னாடியே ஆண் பெண் இணைந்து வாழ்வது இப்போது மிகச் சாதரணமாகி விட்டது. பெண்கள் மூன்று வகையால் மாட்டிக்கொள்கிறார்கள். ஆண்களை நம்பி தன் வாழ்க்கையை ஏமாந்து போகிறார்கள். அவர்களைத் தான் பாக்கியராஜ் சார் எச்சரித்து இருந்தார். ‘மெளன கீதங்கள்‘ என்ற படம் மூலமாக தமிழ்நாட்டின் மொத்தப் பெண்களுக்கும் பிடித்த இயக்குநராக மாறியவர் பாக்யராஜ் சார். அவர் மீது வழக்குப் பதிவு செய்ததற்குப் பின்னால் பெரிய சூழ்ச்சி இருக்கிறது. அவர் என்றுமே‘‘பெண்களுக்கான இயக்குநர்‘‘. இவ்வாறு பேரரசு பேசினார். மற்றும் கே.பாக்யராஜ், ,படத்தின் இயக்குநர் எல்.ஜி ரவிசந்தர் , தயாரிப்பாளர் வி.டி. ரித்திஷ்குமார் நாயகன் சந்தோஷ் பிரதாப் நடிகர் சாம்ஸ்,
இசை அமைப்பாளர் ஹித்தேஷ் முருகவேள், இயக்குநர் ஏ வெங்கடேஷ் ,தயாரிப்பாளர் கே. ராஜன் ஆகியோரும் பேசினார்கள்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *