இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டார்சி ஷார்ட் இடம்

இந்தியத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டார்சி ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் ஆட்டம், மும்பையில் ஜனவரி 14 அன்று தொடங்குகிறது.
இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற மேக்ஸ்வெல், கவாஜா, ஷான் மார்ஷ், ஸ்டாய்னிஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள்.
உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக தோற்ற பிறகு முதல் முறையாக ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது ஆஸ்திரேலிய அணி. டெஸ்டில் கலக்கி வரும் மார்னஸ் லபுசானே ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ளார். ஜோஷ் ஹேஸில்வுட், சீன் அபாட், ஆஷ்டன் டர்னர், ஆஷ்டன் அகர் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
இந்நிலையில், பிக் பாஷ் லீக் டி20 போட்டியில் விளையாடி வரும் வேகப்பந்துவீச்சாளர் சீன் அபாட்டுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் அவர், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து டார்சி ஷார்ட், ஆஸி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டார்சி ஷார்ட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், பீட்டர் ஹேண்ட்காம்ப், ஜோஷ் ஹேஸில்வுட், மார்னஸ் லபுசானே, கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் டர்னர், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *