‘அசுரன்’ பட 100 வது நாள் விழா

தனுஷ் நடித்த ‘‘அசுரன்’‘ படம் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்து இருக்கிறது. இதையொட்டி படத்தின் 100 வது நாள் விழா சென்னையில் நேற்று காலை நடந்தது.
படத்தை இயக்கிய வெற்றி மாறன், கதாநாயகன் தனுஷ், படத்தை தயாரித்த கலைபுலி தாணு, இசை அமைத்த ஜி வி பிரகாஷ் குமார், படத்தில் நடித்துள்ல இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், ஏ.வெங்கடேஷ், கென் கருணாஸ், பவன் , வெங்க்கடேஷ், பட அதிபர் அபிராமி ராமநாதன், தியேட்டர் அதிபர் பன்னீர் செல்வம், பைனான்சியர் அன்புசெழியன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டு பேசினார்கள்.
பட அதிபர் தாணு பேசுகையில் ‘‘ நான் இது வரை 42 படங்களை தயாரித்து இருக்கிறேன். அதில் மிக பெரிய வெற்றியையும் வசூலையும் தந்தது இந்த்படம் தான்.
அதற்கு காரணம் இயக்குனர் வெற்றி மாறன் கதாநாயகன் தனுஷ் ஆகியோரின் கடும் உழைப்பு தான் .தனுஷ் இந்த இளம் வயதில் 2 குழந்தைகளுக்கு அப்பாவாக அசுரனில் நடித்து இருக்கிறார். இதை தனுஷ் தவிர வேறு எந்த நடிகரும் நடிக்கவே துணிந்து இருக்க மாட்டார்கள். தனுஷ் நடித்திருக்கிறார் என்பது மட்டுமல்ல. கேர்கடராகவே வாழ்ந்திருக்கிறார். என்ன ஒரு சிறப்பான நடிப்பு? சிவாஜிக்கு பிறகு எல்லா வேடத்திலும் நடிக்க கூடிய ஒரே நடிகர் தனுஷ் மட்டுமே.‘‘என்றார்.
அபிராமி ராமநாதன் பேசுகையில்‘‘ அசூரன் படத்தை சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிப்பு, சிறந்த இசை‘‘ ஆகிய 4 பிரிவுகளுக்கும் மத்திய அரசின் விருதுக்காக அனுப்ப வேண்டும்’’ என்றார்.
தனுஷ் பேசுகையில்‘‘ இப்படம் என் திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்’’ என்றார். நிகழ்ச்சியினை பாராஸ் ரியாஸ் தொகுத்து வழங்கினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *