விஷாலுக்கு வில்லனாக ஆர்யா

நடிகர்கள் விஷாலும், ஆர்யாவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் அண்ணன் – தம்பிகளாக நடித்தார்கள். அதன் பிறகு ‛இரும்புத்திரை’ படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க ஆர்யாவை கேட்டனர். அப்போது ஆர்யா மறுத்து விட்டார். அதன்பிறகு தான் அர்ஜுன் நடித்தார்.
இப்போது ஆர்யா ஒரு படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டு இருப்பதாக தகவல் வெளீயாகி உள்ளது.
‘‘அரிமா நம்பி‘‘, ‘‘இரு முகன்‘‘,‘‘ நோட்டா‘‘ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் அடுத்து இயக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார் இது இரு ஹீரோக்கள், மற்றும் இரு ஹீரோயின்கள் கொண்ட கதை. இரு ஹீரோக்களில் ஒருவர் நல்லவர், ஒருவர் கெட்டவர், இவர்களின் மோதல் தான் படத்தின் கதை.
இதில் விஷால் நல்லவர் கேரக்டரில் நடிக்கிறார். கெட்டவன் கேரக்டரில் நடிக்க பல நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டனர். இந்நிலையில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க ஆர்யா ஒப்புக் கொண்டிருக்கிறார்.. இதில் விஷால் ஜோடியாக ரித்து வர்மா நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஆர்யா ஜோடியாக நடிக்க நடிகை தேர்வு நடந்து வருகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *