BREAKING NEWS

சீனாவில் உள்ள கிளைகளை மூடியது ஆப்பிள் நிறுவனம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் உள்ள கிளைகளை ஆப்பிள் நிறுவனம் மூடியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இறப்பவர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்துகொண்டே செல்கிறது. வியாழக்கிழமை வரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஹுபெய் மாகாணத்தில் மட்டும் 259  பேர் இறந்துள்ளனர். அதேபோல வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளவர்களின் எண்ணிக்கையும் 9,692 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா உள்பட 20 நாடுகளுக்கு இந்த வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. சீனாவில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பியவர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது. உலக சுகாதார நிறுவனமும் சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கொரோனா வைரஸ் தாக்குதலை முறியடிப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சீனாவில் உள்ள தனது நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகங்கள், தொடர்பு மையங்கள்,ஸ்டோர்ஸ் ஆகியவற்றை மூடுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 9-ம் தேதி வரை தனது நிறுவனத்தின் மையங்கள் மூடியிருக்கும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது. சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தலின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *