BREAKING NEWS

அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு ஆரம்பம்

‘‘நேர் கொண்ட பார்வை’‘ படத்தை அடுத்து நடிகர் அஜித் குமார் நடிகை தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ‘‘வலிமை‘‘ என பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இப்படத்தை எச். வினோத் இயக்குகிறார்.
இப்படத்தில் அஜித் இரு வேடங்களில் நடிக்கிறார்
படப்பிடிப்பு எப்போது துவங்கும் என, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் விழா ஒன்றில் பங்கேற்ற போனி கபூர், ”வலிமை படப்பிடிப்பு, ஐதராபாதில் உள்ள, ‘ராமோஜி ராவ் பிலிம் சிட்டி’யில், வருகிற 13ம் தேதி தொடங்குகிறது, என்றார். படத்துக்காக ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *