BREAKING NEWS

ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் ரூ.25 கோடி பறிமுதல்

ஏ.ஜி.எஸ். சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையை தலைமை இடமாக கொண்டு ஏஜிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது சினிமா தயாரிப்பு, வினியோகம், மற்றும் திரைப் படங்களுக்கு பைனான்ஸ் வழங்குதல் ஆகிய தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை 10 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை தியாகராய நகரில் உள்ள ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் வீட்டில், 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அருகில் உள்ள திருமலை பிள்ளை தெருவில் இருக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை இடத்திலும், வில்லிவாக்கம், தியாகராயநகர், நாவலூர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஏ.ஜி.எஸ் திரையரங்குகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மொத்தமாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.25 கோடி பறிமுதல் செயய்ப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *