தொழில் அதிபரை 3 வதாக திருமணம் செய்து கொண்ட நடிகை

‘‘மவுனம் பேசியதே‘‘,‘‘ இனிது இனிது காதல் இனிது‘‘ போன்ற படங்களில் நடித்து இருப்பவர், நடிகை நேகா பெண்ட்சே.
பிரபல மராத்தி சினிமா நடிகையான நேகா இவர் சமீபத்தில், ஷர்துல் பயாஸ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணம் குறித்து பாலிவுட்டில் பரபரப்பாக பேடப்பட்டது.
தொழிலதிபர் ஷர்துல் பயாஸ், ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது, அவருக்கு இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்.
இரண்டு திருமணமான தொழிலதிபரை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டதற்காக நடிகை நேகா பெண்ட்ஸ் திருமணம் செய்துக் கொண்டதை ரசிகர்கள் விமர்சித்து வருவதோடு, பெரிய அளவில் வயசு வித்தியாசம் உள்ளவரை ‘‘பணத்திற்காக தான் திருமணம் செய்துக் கொண்டார்,‘‘ என்றும் கமெண்ட் தெரிவித்து வந்தார்கள்.
இந்த விமர்சனங்களுக்கு நேகாவும் பதிலடி கொடுத்து இருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், “அவர் விவாகரத்து ஆனவர் என்பதை தான் குறையாக பேசுகிறார்கள். நானும் வெர்ஜின் இல்லையே” என்று கோபமாக பேசியிருப்பதோடு, “வேலை உள்ளிட்ட சில விஷயங்களால் பலர் தாமதமாகத்தான் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். அதனால், திருமணத்திற்கு முன்பே பலருக்கு இரண்டு மூன்று ரிலஷன்ஷிப் இருந்திருப்பது சாதாரணமாகிவிட்டது.” என்று பதில் அளித்திருக்கிறார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *