BREAKING NEWS

நடிகை பிரியா பவானி சங்கருடன் காதலா? எஸ்.ஜே. சூர்யா பதில்

பல படங்களை இயக்கிய டைரக்டர் எஸ்.ஏ.சூர்யா இப்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளீயான ‘‘மான்ஸ்டர்‘‘ என்ற படம் வெற்றிகரமாக ஓடியது. அதில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தார்.
அந்த படம் வெற்றி பெற்றதையடுத்து எஸ்.ஏ.சூர்யா இப்போது நடித்து வரும் ‘‘பொம்மை’’ என்ற படத்திலும் பிரியா பவானி சங்கரே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.எஸ்.ஏ.சூர்யாவே இப்படத்தை தயாரிக்கிறார். பல வெற்றிபடங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கும் இப்படத்தின் படபிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா , பிரியா பவானி ஷங்கருடன் தான் இருக்கும் ‘பொம்மை’ பட ஸ்டில்லை பகிர்ந்து,‘‘ பிரியா பவானி ஷங்கர் கொஞ்சம் த்ரிஷா மாதிரியும், கொஞ்சம் சிம்ரன் மாதிரியும்‘‘ இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு வைரலானது.
இதை தொடர்ந்து எஸ்.ஏ.சூர்யா பிரியா பவானி சங்கர் மீது காதலில் விழுந்து விட்டார் என செய்தி வந்தது. அவர் தனது காதலை பிரியா பவானி சங்கரிடம் சொன்னதாகவும் வயது வித்தியாசம் காரணமாக அவரது காதலை பிரியா ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது
இதை இப்போது எஸ்.ஏ.சூர்யா கடுமையா மறுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சில முட்டாள்கள் நான் பிரியா பவானி ஷங்கரிடம் காதல் சொன்னதாகவும் அதனை அவர் நிராகரித்ததாகவும் தவறான செய்தி பரப்புகிறார்கள். மான்ஸ்டர் படத்தில் இருந்து அவர் எனக்கு நல்ல நண்பர். நல்ல நடிகையும் கூட அவ்வளவு தான். தவறான செய்திகளை பரப்பாதீர்கள்” என கண்டித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *