BREAKING NEWS

‘படவாய்ப்புக்காக மேலாடையை கழற்றச்சொன்னார்’ – நடிகை ‘பகீர்’ புகார்

சினிமாவில் வாய்ப்புக்காக, பெண்களிடம் பாலியல் தொந்தரவு கொடுக்கும் அவர் பழக்கம் இருப்பதாக பல நடிகைகள் ‘மீடு வில் கூறி வருகிறார்கள்.‘ இந்த புகார் இந்திய சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரபல இந்தி நடிகையான மஹ்லார் ரத்தோட் ஒரு பகிர் புகாரை இப்போது வெளியிட்டு இருக்கிறார். இவர்,‘ சன்சில்க் ரியல் எஃப் எம்‘‘, ‘‘ஹோஸ்டேஜஸ்‘‘,‘‘ தேரே லியே புரோ‘‘ உள்பட சில படங்களில் நடித்துள்ளார்., தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
ஒரு பேட்டியல் தனது பாலியல் தொல்லை அனுபவங்கள் பற்றி கூறியதாவது:-, சினிமாவில் பெரிய ஆளாகிவிட வேண்டும் என்ற கனவில் 2008 ஆம் ஆண்டில் மும்பை வந்தேன். அப்போது எனக்கு டீன் ஏஜ் வயது. வாய்ப்புக்காக ஒரு தயாரிப் பாளரைச் சந்தித்தேன்.
அவருக்கு 65 வயது இருக்கும். என்னிடம், நான் உன்னில் ஒருவனாக இருக்கிறேன் என்றார். எனக்குப் புரியவில்லை. பிறகு எனது மேலாடையை கழற்றச் சொன்னார். நான் நடுங்கிவிட்டேன். என்ன செய்வதென்று தெரியவில்லை.பிறகு எனக்கு வாய்ப்பே வேண்டாம் என்று அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன் ‘‘
இவ்வாறு நடிகை மஹ்லார் கூறியுள்ளார்.
அந்த தயாரிப்பாளர் யார் என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *