BREAKING NEWS

நடிகர் வடிவேலு தலைமறைவா..?

நடிகர் வடிவேலு நடித்த ‘எலி‘ படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார். இப்படத்தில் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. இந்நிலையில் மதுரை மூன்றுமாவடி பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் வீட்டில் புகுந்து அடித்து நொறுக்கியதாக வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன் உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சதீஷ்குமாரின் கட்டுமான நிறுவன மேலாளரான கோவிந்தராஜ் என்பவரை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த அன்று, சதீஷ்குமாரின் வீட்டிற்கு மணிகண்டன் உள்ளிட்ட மூன்று பேர் வந்த காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி.,யில் பதிவாகியிருந்தன. அந்தக் காட்சிகளின் அடிப்படையில் சதீஷ்குமார் மதுரை புதுார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தாக்குதல் – மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மணிகண்டன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகி்ன்றனர். இந்த வழக்கு தொடர்பாக, நடிகர் வடிவேலு தலைமறைவானதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து நடிகர் வடிவேலு ஒரு விளக்கம் அளித்திருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- : இந்த ஆண்டில், மீண்டும் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன்.
இதையறிந்த சிலர், என்னுடைய எதிர்காலத்தை பாழடிக்கும் விதமாக சில காரியங்களை செய்து வருகின்றனர். எலி படத் தயாரிப்பாளர் சதீஷ்குமார், சிலரது துாண்டுதலின் பேரில், தன் மீது அவதுாறு பரப்புகிறார். இந்த வழக்கு தொடர்பாக, தான் தலைமறைவாகவில்லை. குலதெய்வக் கோயிலுக்கு சென்று வந்தேன்.
இந்த வழக்கில், போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி, உண்மையில் என்ன நடந்தது என்பதை தெரிந்து, அதன்படி செயல்பட வேண்டும். இவ்வாறு நடிகர் வடிவேலு கூறியிருக்கிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *