முஸ்லிம் மதத்துக்கு மாறினார், நடிகர் ஜெய்

நடிகர் ஜெய் முஸ்லிம் மதத்துக்கு மாறி விட்டதாக அறிவித்துள்ளார்.
அவரிடம் ’’நீங்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாகச் செய்திகள் வெளியானதே?” என கேட்கப்பட்டது இதற்கு ஜெய் பதில் அளிக்கையில்,‘‘. “உண்மைதான். ஏழாண்டுகளாக நான் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகிறேன். எனக்கு இஸ்லாம்மீது இனம்புரியாத நம்பிக்கை ஏற்பட்டுச்சு. ‘சாமியே கும்பிடாத பிள்ளை, ஏதோ ஒரு சாமியையாவது கும்பிடறானே’ன்னு வீட்டில சந்தோஷப்பட்டாங்க. மதம் மாறினாலும் இன்னும் பேர் மாத்தலை. அஜீஸ் ஜெய்னு பேரை மாத்திக்கலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்!”‘‘ என்றார்.
“நடிகை அஞ்சலியுடன் உங்களுக்கு காதல் என்கிறார்களே?‘‘ என்ற கேள்விக்கு , பதில் அளிக்கையில், “எனக்கே தெரியாம என்னைப்பத்தி என்னென்னமோ பேசுறாங்க. கல்யாணம்கிறது நல்ல விஷயம்தானே! அஞ்சலியைக் கல்யாணம் பண்ணிட்டா அதை ஏன் மறைக்கணும்? அஞ்சலியுடன் எனக்குக் காதலும் கிடையாது; கல்யாணமும் கிடையாது!” என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *