- உலகச்செய்திகள், செய்திகள்

84 வயது ரூபர்ட் முர்டோக் 4-வது திருமணம் இங்கிலாந்தின் ‘தி டைம்ஸ்’ பத்திரிகை அதிபர்

லண்டன், மார்ச், 6:-

இங்கிலாந்து பத்திரிகை அதிபரும், 84வயதான ரூபர்ட் முர்டோக் ,  ஜெர்ரி ஹால் எனும் 59வயது மாடலிங் பெண்ணை 4-வது திருமணம் செய்து கொண்டார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரூபர்ட் முர்டோக், தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார். இங்கிலாந்தின் மிகப் பிரபலமான ‘தி சன், தி டைம்ஸ்’ நாளேடுகளின் அதிபரான முர்டோகுக்கு 5 நாடுகளில்  120 நாளேடு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அது மட்டுமல்லாமல், நியூஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் தலைவராகவும், புகழ்பெற்ற தி பாக்ஸ் சேனலின் அதிபரும் ரூபர்ட் முர்டோக்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஏறக்குறைய 1,120 கோடி அமெரிக்க டாலர் சொத்துக்கள் உள்ளன.

இவருக்கு ஏற்கெனவே 3 திருமணங்கள் ஆகி விவாகரத்து ஆகி உள்ள நிலையில் முன்னாள் மாடல் ஜெர்ரி ஹால் என்ற 59 வயது பெண்ணுடன் முர்டோகுக்கு காதல் மலர்ந்தது. ஜெர்ரி ஹாலுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இவரும் தனது முதல்கணவரை விவாகரத்து செய்து முர்டோக்கை திருமணம் செய்துள்ளார்.  லண்டனில் பிளீட் தெருவில் உள்ள செயின்ட் பிரைட்ஸ் தேவாலயத்தில் இவர்களின் திருமணம் நேற்று நடந்தது. முர்டோக்கின் 3 மனைவிகளின் 4 மகள்களும், ஜெர்ரியின் முதல் கணவருக்கு பிறந்த 2 மகன்களும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Reply