- செய்திகள்

800 மீட்டர் ஓட்டத்தில் டின்டு லூக்கா ஏமாற்றம் 6-வது இடத்தைப்பிடித்தார்…

ரியோ, ஆக.19-

ரியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் டின்டு லூக்கா அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து, ரியோ ஒலிம்பிக்ஸில் இருந்து வெளியேறினார்.
ஒலிம்பிக்போட்டிகள்

பிரேசிலில் ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ரியோ ஒலிம்பிக்ஸில் மகளிர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டின்டு லூக்கா கலந்து கொண்டார்.
வெளியேறினார்

முதலில் 400மீ தொலைவை விரைவாக கடந்து முன்னிலை வகித்த டின்டு லூக்கா, இறுதியில் பந்தய தூரத்தை 2 நிமிடம் 00.58 வினாடிகளுடன் கடந்து 6-வது இடத்தைப் பிடித்தார். முதல் 2 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் தான் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்பதால், டின்டு லூக்கா அரையிறுதிக்காக வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
பல பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் 65 வீராங்கனைகளில் டுன்டு லுக்கா 29-வது இடத்தைப் பிடித்தார். கடந்த 2010-ம் ஆண்டு மகளிர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் டின்டு லூக்கா 1:59:17 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து தேசிய அளவில் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply