- செய்திகள், வணிகம்

80 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி

 

இந்திய சர்க்கரை உற்பத்தியாளர்கள் சங்கம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்த 2015-16 சர்க்கரை பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) டிசம்பர் வரையிலான 3 மாதங்களில் 79.80 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற பருவத்தின் இதே காலத்தை காட்டிலும் 6.5 சதவீதம் அதிகமாகும். அப்போது 74.90 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது. அதே வேளையில் கடந்த அக்டோபர்-டிசம்பர் மாத காலத்தில் சர்க்கரை ஏற்றுமதி 8 லட்சம் டன்னில் இருந்து 3 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply