- செய்திகள், வணிகம்

8 லட்சம் டன்னாக உயர்வு பாமாயில் எண்ணெய் இறக்குமதி

புதுடெல்லி, டிச. 15:-

நாட்டின் பாமாயில் சமையல்எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பர் மாதத்தில் 10 சதவீதம் உயர்ந்து, 8 லட்சத்து 73 ஆயிரத்து 592 டன்னாக அதிகரித்துள்ளது என்று எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா, மலேசியா நாடுகள் தங்களின் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி வரியை முற்றிலுமாக ரத்து செய்தது மற்றும் சர்வதேச அளவில் விலை குறைவு ஆகியவற்றால் கடந்த நவம்பரில் பாமாயில் இறக்குமதி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் 7.96 லட்சம் டன் மட்டுமே இறக்குமதி ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டு சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களைக் காக்கவும் இறக்குமதிவரியை 20 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயர்த்த எண்ணெ சுத்திகரிப்பாளர்கள் அமைப்பு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply