- செய்திகள்

74 காலிப்பணி இடங்களுக்கு 3 ஆயிரம் பேர் போட்டி ‘குரூப்-1’ மெயின் தேர்வு இன்று தொடக்கம்…

சென்னை,ஜூலை.29-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 ‘மெயின்’ தேர்வு இன்று தொடங்குகிறது.

3 நாட்கள்
துணை ஆட்சியர், டி.எஸ்.பி., வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர் ஆகிய பதவிகளில் 74 காலியிடங்களை நிரப்பும் வகையிலான தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 மெயின் தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி, நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த தேர்வு சென்னையில் மட்டும் நடக்கிறது.

இதற்காக 3 ஆயிரத்து 815 பேர் விண்ணப்பித்துள்ளனர். எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 38 தேர்வு மையங்களில் தேர்வு நடக்கிறது.
மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்து நேர் காணலுக்கு அழைக்கப்படுவர். இறுதியாக மெயின் தேர்வில் பெற்ற மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்.

பதவி உயர்வு
இந்த தேர்வு மூலம் நேரடியாக துணை ஆட்சியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், டி.எஸ்.பி. பணியில் சேருவோர் ஐ.பி.எஸ். அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறமுடியும். அவர்கள் தமிழ்நாடு ‘கேடரிலேயே’ தங்கள் பணியைத் தொடரலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply