- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

71-வது பிறந்தநாள் இல.கணேசனுக்கு பிறந்த நாள் தலைவர்கள் வாழ்த்து

சென்னை, பிப்.17-
இல.கணேசனின் 71-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, அத்வானி உள்பட கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
71–-வது பிறந்தநாள்
பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசனுக்கு நேற்று 71–-வது பிறந்தநாள். இதையொட்டி மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி பிள்ளையார் கோவிலில் காலையில் சிறப்பு வழிபாடு நடத்தி சுவாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு அவரது வீட்டில் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்திரிகள் சுஷ்மாசுவராஜ், வெங்கையா நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியும் போனில் வாழ்த்து தெரிவித்தார்.
கட்சியினர் வாழ்த்து
கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பொற்றாமரை அரங்கத்தினர் என பலர் அவரது வீட்டுக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். தாம்பரம் சட்டமன்ற தொகுதி பா.ஜனதா சார்பில் தொகுதி பொறுப்பாளர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் ஆளுயர மாலை அணிவித்து மலர் கிரீடம் சூட்டினர். பொற்றாமரை சங்கரன், டால்பின் ஸ்ரீதரன், ஆ.சொ.முத்துக்கண்ணன், போட்டோ சிவலிங்கம் உள்பட பல நிர்வாகிகள் சால்வை அணி வித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் இல.கணேசன் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயம் சென்று கட்சியினர் மத்தியில் பிறந்த நாள் கொண்டாடினார். மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மோகன்ராஜுலு, துணைத்தலைவர் வானதி சீனிவாசன், எச்.ராஜா, சவேரா சக்கரவர்த்தி உள்பட பலர் வாழ்த்து கூறினர்.

Leave a Reply