BREAKING NEWS

7 பேரை விடுதலை செய்ய அதிகாரம் உள்ளதா? தமிழக அரசு பதில்

ராஜிவ் கொலை வழக்கில், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட, ஏழு பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், சட்டவிரோத காவலில் இருப்பதாக அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நளினி மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மாநில அரசின் பரிந்துரையை பரிசீலித்த பின், 7 பேர் விடுதலையை, மத்திய அரசு நிராகரித்தது. அதே நேரத்தில் விடுதலை கோரி பேரறிவாளன் அனுப்பிய தனி மனு மீது, கவர்னர் முடிவெடுத்து கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. எனவே, கவர்னருக்கு, வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட அதிகாரத்தின்படி, விடுதலை குறித்து முடிவெடுக்கலாம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை எனவும், விடுதலை குறித்து கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியது. இதற்கு, நளினி தரப்பு வாதிட்டதில், தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும், எனக்கூறப்பட்டது. பின்னர் நீதிபதிகள் நளினி சிறையில் இருப்பது சட்டவிரோத காவலா? சட்டப்பூர்வ காவலா? என்பது குறித்து தமிழக அரசு பிப்.,18ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *