- செய்திகள், மாநிலச்செய்திகள்

7 கோடி எல்.இ.டி. பல்புகள் வினியோகம் செய்து மத்திய அரசு புதிய சாதனை

புதுடெல்லி, மார்.2:-

மத்திய அரசின் திறன் ஒளித்திட்டத்தின்(ஈ.ஈ.எஸ்.எல்.) அடிப்படையில் 7 கோடி எல்.இ.டி. பல்புகள் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மின்சார மற்றும் எரி சக்தித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: மத்திய அரசின் உள்நாட்டு திறன் ஒளித் திட்டத்தின் அடிப்படையில், மின்சிக்கனம், மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு ஆகியவற்றின் அடிப்படையில் நாடுமுழுவதும் 7 கோடி எல்.இ.டி. பல்புகள்  வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்த சாதனை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட 29-ந் தேதிஅன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

11 மாநிலங்களில் 2.3 கோடி மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் திறன் ஒளித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.  7 கோடி எல்.இ.டி பல்புகள் மூலம், 2.4 கோடி கிலோவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு, மார்ச் மாதத்துக்குள் 77 கோடி எல்.இ.டி பல்புகள் மக்களுக்கு வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply