- செய்திகள், வணிகம்

68 ஆயிரம் டன் பதுக்கல் பருப்பு விற்பனை…

உற்பத்தி குறைந்தது, சப்ளை நெருக்கடி போன்றவற்றால் உள்நாட்டில் பருப்பு ரகங்களின் விலை கடும் ஏற்றம் கண்டது. குறிப்பாக 1 கிலோ துவரம் பருப்பு விலை ரூ.200-ஐ தாண்டியது. இதனையடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்தவும், சப்ளையை அதிகரிக்கவும் நாடு முழுவதும் பதுக்கல்காரர்களிடம் இருந்து பருப்பு பறிமுதல் செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. 14 மாநிலங்களில் 14,177 இடங்களில் மேற்கொண்ட சோதனையில் அவர்களிடம் இருந்து மொத்தம் 1.30 லட்சம் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 68 ஆயிரம் டன் பதுக்கல் பருப்பு வெளிச்சந்தையில் விற்பனைக்கு செய்யப்பட்டது. நாடாளுமன்ற மாநிலங்களவையில்  மத்திய உணவு துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துப் பூர்வமான பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply