- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

60 ஆண்டு கால ராணுவ சேவையில் இருந்து ஓய்வு 5 நட்சத்திர ஓட்டலாக மாறும் "ஐ.என்.எஸ்.வீராட்"

சென்னை,பிப்.16-
இந்திய கப்பல் படையில் 60 ஆண்டு சேவையில் இருந்து ஓய்வு பெற்று 5 நட்சத்திர ஓட்டலாக மாற்றப்பட்டுள்ள ஐ.என்.எஸ்.வீராட் என்ற போர்க்கப்பல் நேற்று சென்னை வந்தது.
ரூ.700 கோடி
இந்திய கப்பல் படையில் 60 ஆண்டுகளாக சிறப்பிடம் பெற்ற ஐ.என்.எஸ்.வீராட் என்ற போர்க்கப்பல் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டது. 30 ஆண்டு காலம் இங்கிலாந்து கப்பல் படையில் இருந்த இந்த கப்பல் 1987-ம் ஆண்டு இந்திய கப்பல் படையில் சேர்க்கப்பட்டது. சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கப்பல் படை விழா அணி வகுப்பில் பங்கேற்ற இந்த கப்பல் தொடர்ந்து அங்கேயே நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்த கப்பலை அருங்காட்சியகத்துடன் கூடிய 5 நட்சத்திர ஓட்டலாக மாற்ற  ஆந்திர அரசு திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கப்பலில் 1,500 அறைகள் உள்ளன. இதனை கரைக்கு கொண்டு வருவதற்கே ரூ.400 கோடி செலவாகும். இதன் அறைகளை நட்சத்திர ஓட்டல் போல மாற்றுவதற்கு மேலும் ரூ.300 கோடி செலவாகும். ஆக மொத்தம் ரூ.700 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது.
சென்னை வந்தது
இந்த போர்க்கப்பலை 5 நட்சத்திர ஓட்டலாக மாற்றுவதில் ஆந்திர அரசு தீவிரமாக உள்ளது. ஏற்கனவே ராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற ஐ.என்.எஸ்.விஷ்ராந்த் என்ற கப்பலை சொகுசு ஓட்டலாக மாற்ற மராட்டிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அந்த மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது, 5 நட்சத்திர ஓட்டலாக மாறப்போகும் ஐ.என்.எஸ்.வீராட் போர்க்கப்பல் நேற்று சென்னை துறைமுகத்துக்கு வந்தது. இதனை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply