- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

6-வது முறையாக என்னை முதல்வராக தேர்ந்து எடுப்பீர்கள் கருணாநிதி நம்பிக்கை…

திருச்சி,ஏப்.28-
தமிழகத்தில் என்னை 6வது முறையாக என்னை முதல்வராக தேர்ந்து எடுப்பீர்கள் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்து பேசினார்.
திருச்சி – புதுக்கோட்டை
திருச்சி பொன்மலை ஜி-கார்னர் ரெயில்வே மைதானத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஆதரித்து திருச்சி தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மற்றும் புதுக்கோட்டை  தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:-
முடிவு செய்துவிட்டீர்கள்
தமிழக வாக்காளர்கள் தேர்தல் முடிவு குறித்து எப்போதோ முடிவு எடுத்து விட்டீர்கள். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க தமிழக வாக்காளர்கள் முடிவு செய்துள்ளீர்கள். அதனைச் செயல்படுத்தி காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. திருச்சியில் நான் பேசுகின்றேன் என்றால், அதற்கு காரணம் உங்களின் அன்புதான்.
ஏமாற்றாது
திருச்சி என்னை எப்போதும் ஏமாற்றாது. திருச்சியில் பெறப்போகும் வெற்றி தென்புறத்தில் பிரதிபலிக்கும். தி.மு.க.-காங்கிரஸ் இந்த தேர்தலில் ஒன்றுசேர்ந்து மக்கள் நல்வாழ்விற்காக தொடங்கியுள்ள யுத்தத்தில் வெற்றி பெற போகிறோம் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இப்போது மறந்து விட்டு, உங்களின் கனவை மறந்துவிட்டீர்கள் என்றால் உங்கள் எதிர்காலம் மேலும் இருள்ஆகும்.
நம்பிக்கை
6-வது முறையாக என்னை முதல்வர் ஆக்குவீர்கள். தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மக்களை பார்ப்பதையே பாவம் என நினைக்கிறார். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என சாதிக்கும் முதலமைச்சர். இப்படிப்பட்ட முதல்வரின் ஆட்சி 3 வாரமோ அல்லது 6 வாரமோதான் அவருடைய காலம். அதன்பிறகு வரக்கூடிய ஆட்சி தி.மு.க. – காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகள் இணைந்து ஆளும் ஆட்சியாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கலந்துகொண்டவர்கள்
கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ராசா, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply