- செய்திகள், வணிகம்

58 லட்சம் டன் பருப்பு இறக்குமதி

 

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உணவு துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமான பதிலில் கூறியிருப்பதாவது:-
உள்நாட்டில் தேவையை காட்டிலும் உற்பத்தி குறைவாக உள்ளதால் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் 57.9 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய 2014-15-ம் நிதி ஆண்டைக் காட்டிலும் 26 சதவீதம் அதிகமாகும். அந்த நிதி ஆண்டில் 45.8 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது.

Leave a Reply