- வானிலை செய்திகள்

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் 1-ந் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் கோவை, சின்ன கல்லாரில் ஒரு செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Leave a Reply