- செய்திகள், வணிகம்

5 ஆயிரம் டன் துவரம் பருப்பு இறக்குமதி

 

மத்திய அரசு, கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிதி ஆண்டில் எம்.எம்.டி.சி. வாயிலாக 4,927 டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பருப்பின் தரம் குறித்து எந்தவொரு புகாரும் எம்.எம்.டி.சி.க்கு வரவில்லை. கடந்த 2013-14, 2014-15 ஆகிய 2 நிதி ஆண்டுகளில் மத்திய அரசு பருப்பு இறக்குமதி செய்யவில்லை. மத்திய தொழில், வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமான பதிலில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply