- செய்திகள்

5 ஆண்டுகளில் 1000 ஸ்டாட் அப் நிறுவனங்கள் ஒரிசா அரசு அனுமதி…

புவனேஸ்வரம், ஆக.25-
5 ஆண்டுகளில் 1000 ஸ்டாட் அப் நிறுவனங்கள் தொடங்க ஒடிசா மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
ஸ்டாட் அப் நிறுவனங்கள்

ஒடிசா மாநில அரசு செவ்வாய்க்கிழமை புதிய கொள்கை ஒன்றை வகுத்துள்ளது. அந்தக் கொள்கையின் படி அடுத்த 5 ஆண்டுகளில் 1000 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஒடிசாவில் தொடங்வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் பெங்களூருவில் நடக்க இருக்கும் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் ஒடிசா ஸ்டார்ட் அப் கொள்கை (ஒஎஸ்பி) அறிக்கையை முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

2020-க்குள் ஒடிசா ஸ்டார்ட் அப் கொள்கை மூலமாக இந்தியாவின் டாப் 3 ஸ்டார்ட் அப் முனையமாக ஒடிசாவை உகந்த சுற்றுச் சூழல், முதலீடுகள் மற்றும் கொள்கை தலையீட்டின் மூலம் மாற்ற வேண்டும் என்று ஒடிசா மாநில அரசு விரும்புகிறது.

நிறுவனங்கள், தொழில் மற்றும் டெக்னாலஜி என மூன்றிலும் இந்த புதிய கொள்கை 5 ஆண்டுகளில் நிறுவப்படும் என்று தலைமை செயலர் ஏ.பி.பதி தெரிவித்துள்ளார். இத்திட்டத்துக்கா ஸ்ட்ரார்ட் அப் மூலதன உள்கட்டமைப்பு நிதிக்காக மாநில அரசால் மைக்ரோ ஸ்மால் மற்றும் மீடியம் எண்டர்பிரைஸஸ் நிறுவனங்கள் அமைச்சகத்திற்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.

Leave a Reply