- செய்திகள், வணிகம்

4ஜி சேவையில் பி.எஸ்.என்.எல். 14 மண்டலங்களில் விரைவில் அறிமுகம்

புதுடெல்லி, ஏப். 4:-

அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனம் விரைவில் நாட்டில் உள்ள 14 தொலைத்தொடர்பு மண்டலங்களில் 4ஜி செல்போன் சேவையை வழங்க தயாராக இருக்கிறது.

இது குறித்து பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ சண்டிகரில் ஏற்கெனவே 4ஜி சேவையை சோதனை முறையில் அறிமுகம் செய்து வெற்றிகண்டுவிட்டோம். 2500 மெகா ஹெட்ஸ் பண்பலையில், எந்த விதமான இடையூறும் இன்றி அதிவிரைவு 4ஜி சேவையை 14 தொலைத்தொடர்பு மண்டலங்களில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறோம்.இதற்காக ஏற்கெனவே இருக்கும் பி.எஸ்.என்.எல். கோபுரத்தில் கூடுதலாக கருவிகளை பொருத்திவிட்டோம். இந்த சேவை வர்த்தகரீதியாக செலவு குறைவாகவும், அதேசமயம் லாபம் கொண்டதாகவும் இருக்கும் '' என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply