- செய்திகள், வணிகம்

33-வது இடத்தில் உதய் கோடக் `நிதி உலகின் டாப் 40' மனிதர்கள் பட்டியலில்

நியூயார்க், மே 13:-
சர்வதேச அளவில் நிதித் துறையில் சக்தி வாய்ந்த 40 மனிதர்கள் பட்டியலில் கோடக் மகிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோடக் 33-வது இடத்தை பிடித்துள்ளார்.

மணி மாஸ்டர்ஸ்

போர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பல்வேறு துறைகளில் பல பிரிவுகளில் முன்னணி பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சர்வதேச அளவில் நிதித் துறையில் சக்தி வாய்ந்த டாப் 40 மனிதர்கள் கொண்ட `மணி மாஸ்டர்ஸ்' பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர்  உதய் கோடக். 3,460 கோடி டாலர் மதிப்பிலான சொத்தை கோடக் மகிந்திரா வங்கி நிர்வாகம் செய்கிறது. உதய் கோடக்கின் நிகர சொத்து மதிப்பு 710 கோடி டாலர் என்று போர்ப்ஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்து மதிப்பு

மணி மாஸ்டர்ஸ் பட்டியலின் முதல் இடத்தில் பிளாக்ஸ்டோன் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன் உள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு 1,020 கோடி டாலராகும். ஜே.பி. மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேமி திமான் இந்த பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார்.

ெபர்க்‌ஷயர் ஹாத்வே தலைவர் வாரன் பபெட் (4), கோல்ட்மேன் சாக்ஸ் தலைவர் லாய்ட் பிளாங்பென் (9), சோராஸ் பண்ட் மேனேஜ்மென்ட் தலைவர் ஜார்ஜ் சோராஸ் (10) ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

Leave a Reply