- செய்திகள், வணிகம்

30 ஆயிரம் கி.மீட்டருக்கு அதிவேக ரெயில் பாதை சீனா திட்டம்

உலகின் மிகப்பெரிய அதிவேக நீண்ட ரெயில் பாதையை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. தற்போது அந்நாடு 19 ஆயிரம் கி.மீட்டர் தூரத்துக்கு அதிவேக நீண்ட ரெயில் பாதையை கொண்டுள்ளது. இதை மேலும் விரிவுபடுத்தும் எண்ணத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டுக்குள் அதிவேக நீண்ட ரெயில் பாதையை 30 ஆயிரம் கி.மீட்டராக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. சீன ரெயில்வே கழகத்தின் துணை தலைமை பொறியாளர் இது குறித்து கூறுகையில், தற்போது 19 ஆயிரம் கி.மீட்டர் தூரத்துக்கு மேல் அதிவேக நீண்ட ரெயில் பாதை செயல்பாட்டில் உள்ளது.  மேலும், 10 ஆயிரம் கி.மீட்டர் தூரத்துக்கு அதிவேக ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் நீண்ட அதிவேக ரெயில் பாதை கொண்ட நாடாகவும், ரெயில் பாதை அமைப்பதில் முன்னணி நாடாக உருவாக்குவதே இதன் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.

Leave a Reply