- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

3 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர்

டர்பன், மார்ச் 6:-

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

இதையடுத்து களம் கண்ட அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

துவக்க ஆட்டக்காரர்களாக பின்ஜும் கவஜாவும் களம் இறங்கினார். கவஜா 9 ரன்களை மட்டும் எடுத்துவிட்டு பெவிலியன் திரும்பிவிட்டார். ஆனால் பின்ஜ்  18 பந்துகளில் 40 ரன்களைக் குவித்தார். இவர் அடித்த இந்த பந்துகளில் 4 சிக்ஸர்களும் 2 பவுண்டரிகளும் அடங்கும். இவருக்கு அடுத்தபடியாக எம். ஆர். மார்ஷ் 35 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்க அணியில் இம்ரான் தாஹிர்  3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 158 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 19.2 ஓவர்களில் 158 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

துவக்க ஆட்டக்காரர்கள் டிவில்லியர்ஸும் டிகாக்கும் சொதப்பிய நிலையில் பின்னர் களம் கண்ட டுபிளெசிஸ், மில்லர் இருவரும் நன்றாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். டிபிளெசிஸ்40 ரன்களும் மில்லர்53 ரன்களும் குவித்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் கோல்டர் நிலே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியை அடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Leave a Reply