- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

3 வாலிபர்கள் கைது ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 150 பவுன் நகை திருட்டு

மாதவரம்,டிச.14:-
மாதவரத்தில் ஓய்வு பெற்ற துறைமுக அதிகாரி வீட்டில் 150 பவுன் நகை, 30 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போன வழக்கில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
150 பவுன் நகை
மாதவரம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கருணாகரன். இவரது மாமனார் சண்முகம் (வயது 75) இவர் ராயபுரத்தில் வீடு கட்டி வருகின்றார். அதனால் மருமகன் கருணாகரன் வீட்டில் மனைவியுடன் தங்கி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது, வீடு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
3 வாலிபர்கள் கைது
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 150 பவுன் நகை,  ரூ.30 லட்சம் பணத்ைத மர்மநபர்கள் திருடி  சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சண்முகத்தின் மனைவி லட்சுமி மாதவரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 3 வாலிபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள்  கைரேகையை பதிவு செய்து சென்றனர். சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.                                  .

Leave a Reply