- செய்திகள், விளையாட்டு

3-வது சுற்றில் நடால், முர்ரே மாட்ரிட் டென்னிஸ்

மாட்ரிட், மே 5:-
மாட்ரிட் நகரில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே முன்னேறியுள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில்  நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில்  ரஷிய வீரர் ஆன்ட்ரே குட்நெட்சோவை எதிர்கொண்டார் நடால். ஒருமணி நேரம்18 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் ஆன்ட்ரேவை 6-3, 6-3  என்ற ேநர்செட்களில் வீழ்த்தினார் நடால்.
மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் செக்குடியரசு வீரர் ராடக் ஸ்டாபானெக்கை 7-6, 3-6, 6-1 என்ற செட்களில்் தோற்கடித்தார் இங்கிலாந்து வீரர் முர்ரே.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலப் வெற்றி பெற்றார். இவர் இத்தாலியின் கரின் நாப்பை 6-1, 6-1 என்ற செட்களில் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கர்லா சுராசை 6-3, 6-2 என்ற செட்களில் வீழ்த்தினார் ஜெர்மனி வீராங்கனை சபைன் லிசிக்கி.

Leave a Reply