- செய்திகள்

3 ஆயிரம் ஊழியர்கள் நீக்கமா? இன்போசிஸ் விளக்கம்…

பெங்களூர்,ஆக.17-

ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து தனது ப்ராஜெக்டை ரத்து செய்ததை அடுத்து 3 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பவில்லை என்று இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனம்

இங்கிலாந்தில் வங்கி ஒன்றை துவங்கும் எண்ணத்தில் இன்போசிஸ் நிறுவனத்துடன் கைகோர்த்தது ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து. இந்நிலையில் புதிய வங்கிக் கிளையை துவங்கும் திட்டத்தை கைவிடுவதாக ராயல் பேங் ஆப் ஸ்காட்லாந்து கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த திட்டம் கைவிடப்பட்டதால் இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்கள் 3 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்று இன்போசிஸ் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து இன்போசிஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது,
3 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கவில்லை. அவர்களை அடுத்த சில மாதங்களில் வேறு திட்டங்களில் பயன்படுத்த உள்ளோம் என்று தெரிவித்துள்ளது..

Leave a Reply