- செய்திகள், மாநிலச்செய்திகள்

29-ந்தேதி முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது

ஜனவரி 29 -ம் தேதி முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ஜனவரி 29 -ம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்றும், இதனை இரண்டு அமர்வுகளாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

அதன்படி ஜனவரி 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 வரை முதல் அமர்வும், மார்ச் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை இரண்டாம் அமர்வும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply