- செய்திகள்

26-ம் ஆண்டு ஆடித்திருவிழா கருமாரியம்மன் கோவில்…

செங்குன்றம், ஜூலை.27-
செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீகருமாரியம்மன் கோவில் 26-ம் ஆண்டு ஆடித்திருவிழா நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு ஆராதனைகள், அம்மன் தெருவீதிஉலா ஆகியன நடைபெற்றன. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னதானத்தை ஆலய நிர்வாகி முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கே.எம்.டில்லி தொடங்கி வைத்தார். விழாவில் ஏ.மகேந்திரன், கே.எம்.துரைவேல், எம்.மகேந்திரன், தருமன், கே.எம்.அர்ஜூனன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply