- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

21 பேருக்கு டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு விரல் ரேகை பிரிவு இன்ஸ்பெக்டர்கள்

சென்னை, பிப்.17-
காவல் துறையில் விரல் ரேகை பிரிவில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றும் 21 பேருக்கு, அதே பிரிவில் டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வவர்மா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பெயர் (பழைய பணியிடம்) – பதவி உயர்வு புதிய பணியிடம்

ஜோதி (கன்னியாகுமரி)- கன்னியாகுமரி, ஹேமா (புதுக்கோட்டை) – புதுக்கோட்டை, சோமசுந்தரம் (திருவாரூர்) – நாகப்பட்டிணம், மாலதி (சென்னை) – சென்னை, அகஸ்டா கனகமணி (திருநெல்வேலி) – சென்னை, முருகானந்தம் (விருதுநகர்) – சிவகங்கை, கிருஷ்ணமூர்த்தி (சென்னை) – சென்னை,
சங்கீதா (ஈரோடு)-ஈரோடு, ரெத்னாசேகர் (ராமநாதபுரம்) – சென்னை சி.சி.டு.டபிள்யூ.சி.ஐ.டி, ரஜினி (நாமக்கல்) – நாமக்கல், ரவிச்சந்திரன் (திருச்சி) – பெரம்பலூர், கே.சங்கர் (திருவள்ளூர்)- காஞ்சிபுரம், கலைகண்ணகி (தஞ்சாவூர்) – சென்னை,
சீனிஅம்மாள் (மதுரை) – சென்னை, பூங்குழலி (காஞ்சிபுரம்) – திண்டுக்கல், யூசுப் (ராமநாதபுரம்) – சென்னை, பஞ்சாட்சரம் (சென்னை) – சென்னை, சுந்தரராஜன் (திருவண்ணாமலை) – திருவண்ணாமலை, டி.சங்கர் (வேலூர்) – கிருஷ்ணகிரி, சரவணன் (கடலூர்) – திருவள்ளூர், ராஜலிங்கம் (தர்மபுரி) – சேலம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply