- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

20 ஓவர் போட்டிக்குப் பின் ஓய்வு பெற வாய்ப்பு இலங்கை வீரர் மலிங்கா சூசகம்

மிர்பூர், பிப்.27:-

இந்தியாவில் நடைபெற உள்ள 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்குப் பின் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று இலங்கையின் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் லஷித் மலிங்கா சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் நடக்க இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின் ஓய்வு பெறுவீர்களா என்ற கேள்விக்கு அப்படியும் நடக்கலாம், வாய்ப்பு உள்ளது என்று சூசகமாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் 12 ஆண்டுகளாக தேசிய அணிக்காக விளையாடி வருகிறேன். 32 வயதை பூர்த்தி செய்துவிட்டு 33 வயதை அடைந்துள்ளேன். இந்த நிலையில் கடுமையான காயம் காரணமாக பூரண ஓய்வு தேவைப்படுகிறது. ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஓய்வு தேவை என்று குறிப்பிட்டார். தங்களது நாட்டு அணிக்காக விளையாட வேண்டிய தேவை இருந்தால் தன்னால் பூரண குணமடைய முடியாத நிலை உண்டாகிவிடும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இப்போது ஓய்வு பெறுவதற்கான சரியான தருணம் இல்லை என்றும் மலிங்கா குறிப்பிட்டார். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டியுள்ளது. 20 ஓவர் போட்டியில் மிகவும் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர் என்பதால் தாம் அந்தப் போட்டியில் விளையாட வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

Leave a Reply