- செய்திகள், விளையாட்டு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தீவிரமாக தயாராகி வருகிறது தர்மசாலா மைதானம்

தர்மசாலா, பிப்.17:-

20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் ஆட்டங்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு தர்மசாலா உள்ள  கிரிக்கெட் மைதானம் போர்க்கால அடிப்படையில் தயாராகி வருகிறது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் அடுத்த மாதம் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தப் போட்டியின் 8 ஆட்டங்கள் ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் அமைந்துள்ள ஹிமாசலப்பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. இந்த நிலையில் இந்தப் போட்டிக்காக தர்மசாலா மைதானம் போர்க்கால அடிப்படையில் தயாராகிவருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இந்த மைதானத்தில் மார்ச் 15-ம் தேதி போட்டி நடக்கிறது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது குறித்து பாகிஸ்தான் இன்னும் உறுதி செய்யவில்லை. முன்னதாக மார்ச் 18- ம் தேதி ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையே இந்த மைதானத்தில் போட்டி நடக்க உள்ளது. அத்தோடு மட்டும் அல்ல 20 ஓவர் மகளிர் உலக கோப்பையின் இரண்டு ஆட்டங்களும் இங்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் போட்டியைப் பொருத்தவரை இந்த மைதானத்தில் தகுதி ஆட்டம் மற்றும் பிரதான ஆட்டங்களுக்கு முன்பு 4 பயிற்சி ஆட்டங்களும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது உள்ள இருக்கைகளின் எண்ணிக்கையை விட 5 ஆயிரம் எண்ணிக்கையை கூட்ட தீர்மானித்ததாகவும் ஆனால் குறைந்தபட்சம் 2000 இருக்கைகளின் எண்ணிக்கையை போட்டியின் போது கூட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கிரிக்கெட் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சர்மா தெரிவித்துள்ளார்

மீதமுள்ள இருக்கைகள் போட்டிக்குப் பின் கூட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply