ஒரே நாளில் 2 சந்தானம் படங்கள் வருமா?

நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் இப்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் கதாநாயகனாக நடித்துள்ல படம் ‘டகால்டி’. இந்தப் படம் ஜனவரி 31ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். அதே சமயம் சந்தானம் நாயகனாக நடித்து எப்போதோ வெளிவர வேண்டிய ‘சர்வர் சுந்தரம்’ படமும் அதே ஜனவரி 31ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள்.
ஒரே நாளில் ஒரே ஹீரோவின் இரண்டு படங்கள் வெளியாவதை தயாரிப்பாளர் சங்கம் மூலமாக எப்போதே நிறுத்திவிட்டார்கள். இந்நிலையில் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவித்த ‘சர்வர் சுந்தரம்’ படத்தை மீண்டும் ஒரு ரிலீஸ் தேதி சொல்லி அறிவித்துள்ளார்கள். இப்படி இதற்கு முன் சில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அந்தப் படம் வெளிவராமல் போய் உள்ளது. இந்த முறையாவது படம் வெளிவருமா என்பது தெரியவில்லை.ஆனாலும், ஒரே நாளில் இப்படி படங்கள் வெளிவருவதைத் தடுக்க கண்டிப்பாகத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அந்த இரண்டு படங்களின் தயாரிப்பாளர்கள் செல்வார்கள். இதில் யார் படம் வெளிவரும், யார் படம் தள்ளிப் போகும் என்பது பஞ்சாயத்திற்குப் பிறகே தெரிய வரும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *