- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

2-வது போட்டியில் இலங்கை தோல்வி ‘தல’ ஊரில் தலைநிமிர்ந்தது இந்தியா தவாண் தாண்டவம்

ராஞ்சி, பிப். 13:-

ராஞ்சியில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில்,  இந்திய அணி 69 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய தவான் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டித்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன.

தவான் அதிவேகம்

ஜார்கன்ட் மாநிலம், ராஞ்சி நகரில் நேற்று இரவு 2-வது போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா, தவான் இருவரும் தொடக்கத்திலிருந்து அதிரடி ஆட்டத்தை கையாண்டனர். குறிப்பாக பிரன்சன்னா வீசிய 4-வது ஒவரில் தவான் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து பேட்டால் தாண்டவமாடினார்.  22 பந்துகளில் டி20 போட்டியில் தவான் தனது முதலாவது அரைசதம் அடித்தார். அதுமட்டுமல்லாமல், டி20 போட்டியில் அதிகவேகமாக அரைசதம் அடித்த 4-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

தவான் 51 ரன்களில் (25 பந்துகள், 2 சிக்சர், 7பவுண்டரி) சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.   ரோகித் சர்மா 43 ரன்களிலும்,  ராகனே25 ரன்களில் பெவிலியன் திரும்பினர். 4-வது விக்கெட்டுக்கு ரெய்னா, பாண்டயா கூட்டணி வேகமாக ரன்களைச் சேர்த்தனர்.

ஹாட்ரிக்

பெரேரா வீசிய 19-வது ஓவரின் 4-வது பந்தில் பாண்டயா 27 ரன்களிலும், அடுத்த பந்தில் ரெய்னாவும் (30 ரன்களில்) கடைசிபந்தில் யுவராஜ் டக்அவுட் ஆக பெரேரா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். டி20 கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 4-வது வீரர் எனும் பெருமையை பெரேரா பெற்றார்.
தோனி 9 ரன்களிலும், ஜடேஜா ரன் ஏதும் சேர்க்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. இலங்கை தரப்பில் பெரேரா 3 விக்கெட்டுகளையும், சமீரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கோல்டன் விக்கெட்

197 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே சேர்த்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தில்சன், குணதிலகா ஆட்டத்தை தொடங்கினர்.  முதல் ஓவர் முதல்பந்திலேயே தில்சனை வெளியேற்றி கோல்டன் விக்கெட்டை அஸ்வின் பெற்றார். நெஹ்ரா தனது பங்கிற்கு பிரசன்னா(1), குணதிலகா(2) ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து அதிர்ச்சி அளித்தார். இதனால், 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது

அதன்பின், ஜடேஜா, அஸ்வினின் மாயஜால சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியால் திணறினர். சன்டிமால்(31), கபுகதேரா(32) ரன்களில் ஜடேஜா சுழலிலும், சனகா(27), பெரேரா (0) சேர்க்காமலும் அஸ்வினிடம் பணிந்தனர். கடைசி வரிசையில் களமிறங்கிய சேனநாயகே, சமீரா  டக் அவுட்டில் பும்ரா வேகத்தில் பெவிலியன் திரும்பினர். ஸ்ரீவர்த்தனா 27 ரன்னிலும், ரஜிதா 3 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே சேர்த்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்திய தரப்பில்  அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், நெஹ்ரா, பும்ரா, ஜடேஜா தலா 2விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

Leave a Reply